Saturday, 29 May 2010

அருள்ஜோதி

இது எனது தனிப்பட்ட இணையம். இதில் வரும் கருத்துக்கள் கணிப்புக்கள் அணைத்திற்கும் நானே பொறுப்பு. இதை ஒரு நாட்குறிப்பாகவோ அல்லது எனது மனக்குறிப்பாகவோ கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு சிக்கலை நான் தாண்டியாகனும். எனது விமர்சனங்களில் மற்றவர்களுடைய பெயர்களை, அல்லது உறவு முறைகளை நான் உபயோகப்படுத்தலாமா என்பதே. சம்பவங்களைக் குறிப்பிடும்போது சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமல் எழுதுவதென்பது உப்பில்லா பண்டம் உண்பதைப் போல சப்பென்றிருக்கும்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது ஊரறிந்த பழமொழி. வெறும் குப்பைக்குப் போகப் போகின்ற இந்தப் பண்டத்தை படைப்பதில் எனக்கென்ன லாபம். வெறும் லாப நஷ்டக் கணக்குப் போட்டா நாம் வாழ்க்கையில் எதையும் செய்கின்றோம். மனத் திருப்த்திக்கென்றும் எதையாவது செய்கின்றோம் இல்லையா. அந்த வகையில் ஒன்றாய் இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமெனறு இதைத் தொடர்கிறேன்.
இந்தத் தொடருக்கு என்னிடத்தில் எழுத்துப் பிரதி எதுவும் கிடையாது. நேரடியாகவே இணையத்தில் எழுதுவதும் அதனை மேலனுப்புவதும் என்ற முடிவுடன் இதனை ஆரம்பிக்கின்றேன். போகப் போக இதன் வேகம் கூடுமோ அல்லது குறையுமோ என்றும் எனக்குத் தெரியாது. மனத்தை நெருடுகிற நிகழ்வுகள் நிகழ்ந்தால் அதனை அசை போட்டு, கால அவகாசங் கொடுத்து எழுதுவதென்ற முடிவோடுமே இதனை ஆரம்பிகிகின்றேன்.
Daer Jothie How are you?Ireceived your e-mail. Can you explain more about this amma fund.Regards
Anna

Hi
Amma fund என்ற அமைப்பு எங்கள் சகோதரர்களால் 1973ம் ஆண்டு ஆரம்பிகிகப்பட்ட ஒரு ஸ்தாபிதம். அதன் நோக்கம் தனிமனிதன்-குடும்பம்-உலகம் என்று விரிவடைந்து அன்பு,சேவை என்பது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே. எங்கள் சகோதரர்களுக்குள் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவிகளைப்போல் 1979ம் ஆண்டு சூறாவளி அனர்த்தங்களில் அல்லல்பட்ட ஒரு சிலருக்கும் கல்முனை வரை காரில் சென்று செய்ய முடிந்ததை என்னால் இப்போதும் நினைவு கூற முடிகிறது. இது போல அநாதை ஆசிரமச் சிறார்கள் உதவி வேண்டி உதவியற்று நிற்கும் உறவினர், அயலார்க்கும் எம்மாலான உதவிகளைச் செய்ய ஒரு உந்துதலை இவ்வமைப்புத் தருகிறது. ஜோதி. http://ammahfund.blogspot.com/2010/05/2010-05-25.html